பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


வரும்போது, நான் அடுத்த உயரம் ஏற்றும் போது தாண்டுகிறேன் என்றும் கூறிவிடலாம்.

ஆனால், அந்த உயரத்தில் 3 வது முறை தாண்டுகிற வாய்ப்பிலும் தவறிப்போனால், அவர் போட்டியிலிருந்தே விலக்கப்படுவார்.

இன்னொரு குறிப்பையும் நன்றாகக் கவனிக்க வேண்டும்.

ஒரு போட்டியாளர் ஒரு உயரத்தைத் தாண்டும் பொழுது, அந்த வாய்ப்பு தேவையில்லை (Forgoes) என்று கூறிவிட்ட பிறகு, மீண்டும் வந்து அதே உயரத்தைத் தாண்ட விரும்பி அனுமதி கேட்டால், அவருக்கு அனுமதி இல்லை. சமநிலை ஏற்படும் பொழுது மட்டுமே, இதுபோல் மீண்டும் அனுமதி அளிக்க விதி இடம் பொடுக்கிறது. (விதி 146ஐக் காண்க)

7. ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு, குறுக்குக் கம்பத்தை உயர்த்தி வைத்தபிறகு, அதன் உயரத்தை அளந்து கொண்ட பிறகே, போட்டியாளர்களைத் தாண்ட விட வேண்டும்.

இனி, போட்டியாளர் தாண்டி முடித்த உயரம சாதனை படைத்திருக்கிறது என்றால், நடுவர்கள், தாண்டுவதற்குமுன் அளந்தது போலவே, தாண்டி முடித்த பிறகும் ஒரு முறை அளந்து குறித்திட வேண்டும்.

குறிப்பு: போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக, குறுக்குக் கம்பம் உயரக் கம்பங்களுக்கு இடையே