பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


என்பதாக நடுவர் கருதினால், கம்பங்களை மாற்றிட அனுமதி உண்டு.

அப்படி கம்பங்களை மாற்றிவைக்கிற சூழ்நிலை எழுகிறபோது, போட்டியாளர்கள் அனைவரும் ஒரு சுற்றுத் தாண்டலை (A Round) முடித்திருக்க வேண்டும்.

10. இடம் காட்டும் அடையாளப் பொருட்கள் : (Marks) ஒரு தாண்டும் போட்டியாளர், தான் தாண்ட உதவியாக இருக்கும் வகையில் ஏதாவது ஒரு அடையாளப் பொருளை ஓடிவருகிற இடத்திலோ அல்லது உதைத்தெழும்பும் தரையிலோ வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட அடையாளப் பொருளானது போட்டி நடத்தும் பொறுப்பாளர்களால் மட்டுமே தரப்பட்டிருக்கவேண்டும். அத்துடன், குறுக்குக் கம்பம் பார்வைக்கு நன்றாகத் தெரிவதற்காக அதன்மேல் சிறு கைக்குட்டையோ அல்லது அது போன்ற வகைப் பொருள் எதுவானாலும் வைத்துக் கொள்ளவும் அனுமதி உண்டு.

ஓடிவரும் பாதையும், தாண்ட எழும்பும் பரப்பும்
(The Runway and Take-off Area)

11. ஓடிவரும் பாதையின் நீளம் எல்லையற்றது.

குறிப்பு: 1. இடத்தின் பரப்பளவு அதிகமாக இருந்தால், ஓடி வரும் பாதை 25 மீட்டர் தூரத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.