பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அவர்களது தலையாய பணியானது, ஏதாவது எதிர்ப்பு மனுக்கள் வந்தால், அவற்றைப் பரிசீலித்துப் பதில் அளிப்பது.

போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது எதிர்ப்புக்கள் எழும் வேகத்தில், நீதிக் குழுவிடம் அந்நிகழ்ச்சி பற்றி முடிவெடுக்கக் கோரும் சமயத்தில், நீதிக்குழு எடுக்கும் முடிவே முடிவாகிறது. அதுவே இறுதி முடிவாகும்.

பொதுவாக, நீதிக்குழு உறுப்பினர்கள், போட்டி நிகழ்ச்சிகளின் போது எந்த விஷயத்திலும் தலையிடாமல் இருந்திடல் வேண்டும். ஏதாவது சில சமயங்களில், அவர்கள் பார்வையில் நடைபெறும் காரியங்களுக்கு திருத்தம் ஏதாவது நடைபெற வேண்டும் என்று விரும்பினால், அவர் நேரடியாகச் சென்று அதில் தலையிட்டுக் காரியம் ஆற்றக் கூடாது.

அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் பொறுப்பான அதிகாரியை அழைத்து, அவரிடம் கலந்தாலோசித்து, என்ன செய்யலாம், என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற அபிப்ராயங்களை அந்த நீதிக்குழு உறுப்பினற் வழங்கலாம்.

வெற்றி எண்கள் போன்ற விஷயங்களில் சச்சரவு ஏற்படும் போது, அவையும் விதிகளில் குறிப்பிடப்படாத சமயங்களில், நீதிக்குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அந்த நிகழ்ச்சியை இந்திய தலைமை ஒடுகளக் கழகத்தின் பொதுச் செயலருக்கு அறிவித்து விட வேண்டும். நீதிக்குழு தனது முடிவினை அதுபற்றி கூறக் கூடாது.