பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

147




குறிப்பு: 2. சில சமயங்களில் குறிப்பிடுகிற விதிகளின் படி, ஓடிவரும் பாதை குறைந்தது 20 மீட்டர் தூரமாவது இருக்க வேண்டும்.

12. தாண்ட உதைத்து எழும்பும் பரப்பளவானது சமதரையாக இருக்க வேண்டும். தூக்கிச் சென்று பயன்படுத்துகிற பாய் விரிப்பு (Portable mat) விரிக்கப்பட்டால், விதிகளில் கூறுவது போல ஓடி வரும் பகுதி சமதளமாக இருப்பதுடன், பாயின் உயரத்தின் மேற்புறம் முழுவதும் ஒரே அளவு சமமுள்ளதாக இருக்குமாறு அமைக்க வேண்டும்.

13. ஒடி வரும் பாதையும், உதைத்தெழும்பும் தரைப்பகுதியும், ஓடிவரும் திசையிலிருந்து குறுக்குக் கம்பம் திசை நோக்கி அதிகபட்சம் 1250 அளவு சரிந்து செல்லுமாறு அமைந்திருக்கலாம்.

2. சாதனங்கள் (Apparatus):

14. உயரக்கம்பங்கள்: (Uprights) எந்த அமைப்புள்ளதாக, எந்தப் பொருளால் ஆனதாக அந்த உயரக்கம்பங்கள் இருந்தாலும், அவைகள் வளையும், தன்மையில்லாத, உறுதியானதாக நிற்கும் படியாக அமைந்திருக்கவேண்டும்.

அந்த இரண்டுக் கம்பங்களுக்கு இடையிலும் வைக்கப்படவிருக்கும் குறுக்குக் கம்பத்தை சரியாகத் தாங்கிக் கொண்டிருக்கும் ‘தாங்கிகள்’ (Supports) உள்ளவையாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.