பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்



உயரமாகத் தாண்டுவோர் வசதிக்காக, மேலே மேலே உயர்த்துகின்ற வகையில், குறைந்தது 100 மில்லி மீட்டர் உயரம் உயர்த்துகின்ற அளவில், உயரக்கம்பங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

நிறுத்தி வைக்கப்படுகிற இரண்டு உயரக்கம்பங்களுக்கு இடைப்பட்ட தூரமாக குறைந்தது 4 மீட்டரிலிருந்து 4.40 மீட்டள் தூரம் வரை இருக்கலாம்.

15. குறுக்குக் கம்பம் (Cross Bar): மரத்தால் அல்லது உலோகத்தால் மற்றும் இவைகளுக்கிணையான பொருட்களால், குறுக்குக் கம்பம் செய்யப்படலாம். அதன் வடிவம் உருண்டையானதாகவும் அல்லது முக்கோண வடிவமாகவும் செய்யப்படலாம். ஒரு குறுக்குத் கம்பத்தின் நீளம் 3.98 மீட்டரிலிருந்து 4.02 மீட்டர் வரை இருக்கலாம். குறுக்குக் கம்பத்தின் அதிகபட்சமான எடை 2.0 கிலோ கிராம் இருக்க வேண்டும்.

ஒரு குறுக்குக்கம்பம் முக்கோண வடிவத்தில் அமைக்கப்பெற்றிருந்தால், அதன் ஒரு கோணத்தின் (Traingular) அளவானது 28 முதல் 30 மில்லி மீட்டர் இருக்க வேண்டும். முக்கோண வடிவத்தில் குறுக்குக்கம்பம் அமைகிறபோது, அதன் ஓரப்பகுதியானது கூரானதாக இருந்தால், தாண்டுவோருக்குக் காயமும் துன்பமும் அளிப்பதாக அமையும் என்பதால், முக்கோண வடிவத்தின் ஒரத்தினை முறை மழுங்கியதாக சுற்று வளைவுடன் முடிவதாக அமைப்பது சிறந்த குறுக்குக் கம்பமாக அமையப்பெறும்.