பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

151



21. கோல் ஊன்றித்தாண்டுதல்
(Pole Vault)
(விதி 172)

போட்டிக்கான விதிமுறைகள் :

1. ஒருவர் பின் ஒருவராக வந்து போட்டியாளர்கள் தாண்டுகிற வாய்ப்பு வரிசை முறையானது (order), சீட்டுக் குலுக்கல் மூலமாகவே தேர்ந்தெடுத்து, வரிசைப்படுத்தப்படுகிறது. (விதி 143 ஐயும் காண்க).

2. தாண்டும் போட்டியைத் தொடங்குவதற்கு முன்னதாக, குறுக்குக் கம்பம் எந்த உயரத்தில் முதன் முதலாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைத் தொடாந்து ஒவ்வொரு சுற்றும் முடிந்த பிறகு, எவ்வளவு உயரம் உயர்த்தப்படும் என்கிற விவரத்தினை, தாண்ட இருக்கிற எல்லாப் போட்டியாளர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் விவரமாக அறிவிக்கவேண்டியது, (தலைமை) நடுவரின் கடமையாகும்.

எல்லோரும் தாண்ட முடியாமல் தவறிழைத்து போட்டியினின்றும் விலகிக்கொண்ட பிறகு, இறுதியாக ஒருவர் மட்டும் இருக்கிறபொழுது அல்லது முதல் இடத்திற்கு சமநிலை ஏற்பட்டு விடுகிறபொழுது, மேற்கூறியவாறு