பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அறிவிக்கவேண்டிய அவசியமில்லை. தாண்டப் போகிற உயரத்தை மட்டும் தெரிவித்தால் போதும் (146ம் விதியைக் காண்க).

3. ஒவ்வொரு போட்டியாளரும் கோல் ஊன்றித் தாண்டுகிற எல்லா வாய்ப்புகளையும் சேர்த்தே வெற்றி இடங்கள் (Places) கணிக்கப்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல் இடத்திற்கான சமநிலை ஏற்பட்டு, அப்பொழுது பெறுகிற தாண்டும் வாய்ப்புகளும் (Vaults) கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

4. போட்டியை ஆரம்பிக்கும் பொழுது, குறைந்தபட்ச உயரம் என்ன வென்பதை முதலில் தீர்மானித்து, குறுக்குக் கம்பத்தை வைக்கின்ற உயரத்திற்கு மேலாக, தான் விரும்புகிற உயரத்திலிருந்து ஒரு போட்டியாளர் தாண்டத் தொடங்கலாம்.

அவ்வாறு தான் விரும்பிய உயரத்தில் அல்லது ஏதாவது ஒரு உயரத்தில், ஒரு போட்டியாளர் 3 முறைகள் தொடர்ந்து தாண்ட முடியாது தவறிழைத்து விட்டால் (Failures), அவர் அந்த போட்டியிலிருந்து விலக்கப்படுவார்.

குறிப்பு : இந்த விதியின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு போட்டியாளர், ஒரு குறிப்பிட்ட உயரத்தில் முதல் அல்லது இரண்டு வாயப்புகளில் தாண்ட முடியாமல் தவறிழைத்த பிறகும், மூன்றாவது வாய்ப்பைத் தாண்டாது, மேலும் ஒரு உயரத்திற்குக் குறுக்குக் கம்பத்தை உயர்த்திய பிறகு “தாண்டுகிறேன்” என்றும் கூறலாம்.