பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


முறையும் குறுக்குக் கம்பம் கீழே விழும் பொழுதோ, அல்லது மேலே உயர்த்தும் பொழுதோ, முதலில் வைத்திருந்த குறுக்குக் கம்பத்தின் கீழ்ப் பகுதியும் மேல் பகுதியும் அதே முறையில் வைக்கப்படுகிறதா என்பதையும் சரிபார்த்து வைத்திட வேண்டும்.

6. போட்டியிடுகின்ற எல்லா போட்டியாளர்களும் வாய்ப்பினையிழந்து, ஒருவர் மட்டும் தனித்திருக்கிற பொழுது, அவர், தான் தாண்டி முடித்தது போதும் என்கிற வரையிலும், அல்லது தாண்டி வாய்ப்புகளை இழக்கிற வரையிலும் அந்தப் போட்டி தொடர்ந்து நடை பெற வேண்டும்.

போட்டியில் இறுதியாக ஒருவர் தாண்டி, முதல் இடத்தைப் பெற்ற பிறகு, அதாவது போட்டியில் வென்ற பிறகு, அவர் தொடர்ந்து தாண்ட விரும்பினால், எந்த உயரத்திற்குக் குறுக்குக் கம்பத்தை உயர்த்த வேண்டும். என்பதை நடுவர்களும் அதிகாரிகளும் கேட்டுத் தெரிந்து கொண்டு, எடுக்கிற முடிவின் படி அந்த அளவு உயர்த்தி, போட்டியைத் தொடரலாம்.

குறிப்பு : இந்த விதிமுறைகள், கூட்டாகத் தாண்டும் போட்டிகளுக்குப் பொருந்தாது.

7. ஒரு போட்டியாளர் விரும்புகிற பொழுது, அவர் விரும்புகிற ஒரு திசைப் பக்கமாக உயரக்கம்பங்களை நகர்த்தி வைக்கலாம். அப்படி நகர்த்தக் கூடிய சந்தர்ப்பத்தில், தாண்ட உதவும் பெட்டியின் (Box) உட்புறத்தின் மேல் அளவிலிருந்து 0.60 மீட்டர் தூரம் தான் நகர்த்தி வைத்திட விதிகள் அனுமதிக்கின்றன.