பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

13


தலைமை நடுவர்கள் (Referees)

1. ஒட்டப் போட்டிகள்; எறிகள், தாண்டும் களப் போட்டிகள், அரங்கத்திற்கு வெளியில் நடைபெறும் ஒட்டப் போட்டிகள் ஆகிய ஒவ்வொன்றுக்கும் (3) தனித்தனியே ஒவ்வொரு தலைமை நடுவரை நியமித்திடவேண்டும்.

தூரமாக எறியப்படும் எறிகள நிகழ்ச்சிகளை அளக்க எலக்ட்ரானிக் கருவிகள் பயன்படும்போது, அவற்றை அளப்பதற்காக அளக்கும் அதிகாரிகள் ஒருவரோ அல்லது அதற்கும் மேற்பட்டவர்களே, தேவைப்பட்டால், தேவைப்படும் அளவுக்கு வைத்துக் கொள்ளலாம்.

2. விதிகளுக்கு உட்பட்டவாறு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவா என்பதை உன்னிப்பாக இருந்து கண்காணித்துக் கொண்டுவருவது தலைமை நடுவரின் கடமையாகும். போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, விதிகளில் குறிப்பிடாத ஏதாவது ஒரு சம்பவம் நடந்து, அதற்கான முடிவினை எடுக்க நடுவர்கள் முனைந்து குழப்பமடையும் சமயத்தில், அந்த மின்னிய சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கக் கூடிய உரிமையை இவர் பெற்றிருக்கிறார்.

நடுவர்கள் பலர் ஒன்று சேர்ந்து, ஓட்டத்தின் முடிவகளைக் குறிக்கும் பொழுது, குறிப்பிட்ட ஓரிடத்தை யாருக்கு வழங்குவது என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிற அபிநிலையின் போது, அதில் முடிவெடுத்து ஓர் சுமுகமான முடிவினைத் தெரிவிக்கின்ற உரிமையும் தலைமை நடுவருக்கு உண்டு.