பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

157


 11. போட்டியாளர் குறுக்குக் கம்பத்தைத் தாண்டிய பிறகு தள்ளி விடுகிற கோலினை யாரும் தொடுவதற்கோ பிடிப்பதற்கோ அனுமதி கிடையாது. தாண்டி விழும் பகுதிக்கு எதிர்ப்புறமாகக் கோலானது விழுந்தால் அது தவறில்லை என்றாலும், நடுவரின் அபிப்ராயப்படி, அப்படி அந்தக் கோலைப் பிடிக்காமல் இருந்தால், அது குறுக்குக் கம்பத்தைத் தட்டி வீழ்த்தியிருக்கும் என்று கருதினால், அந்தப் போட்டியாளர் முயற்சி வெற்றி பெறவில்லை. அவர் தவறிழைத்தாள் என்றே அறிவித்து விடுவார்.

தாண்ட உதவும் கோல்கள் : (Vaulting Poles):

12. போட்டியாளர்கள் தங்களுக்குரிய சொந்தமான தாண்டும் கோல்களையே பயன்படுத்திட வேண்டும். எந்தப் போட்டியாளரும், மற்றவர்களுக்குச் சொந்தமான கோல்களை, உரிமையாளரின் முன் அனுமதி பெறாமல் பயன்படுத்திடக் கூடாது.

தாண்ட உதவும் ஒரு கோலானது ஏதாவது ஒரு பொருளினால் (material) செய்யப்பட்டிருக்கலாம். அல்லது பல பொருட்களின் கூட்டுக்கலவையாலும் உருவாக்கப் பட்டிருக்கலாம். கோலின் உயரமும், விட்டமும் எந்த அளவிலேனும் அமைந்திருக்கலாம். ஆனால், கோலின் அடிப்பாகம் வழ வழப்பானதாக இருக்க வேண்டும்.

கோலானது நாடாவினால் ஒரு சீராக, சம அளவாக இரண்டு அடுக்குகள் (Layers) கொண்டதாக சுற்றப்பட்டிருக்கலாம். அது ஓரிடத்தில் தான் இருக்க வேண்டும்.