பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/168

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 165 ஈ) தாண்டிக் குதித்த பிறகு தாண்டிய வழியிலேயே பின்புறமாக நடந்து வந்தாலும்; உ) குட்டிக்கரணம் அடிப்பது போன்ற பலவிதமான தாண்டும் செயல்களில் ஈடுபட்டாலும், ஊ) தாண்டுவதற்காகக் கைகளில் கனமான எடைகள் அல்லது பிடிப்புகள் (Grips) ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும். தாண்டுபவர் தவறிழைத்தார் என்று அறிவிக்கப்படுகிறார். 5. உதைத்தெழும்பும் பலகையில் கால் ஊன்றாமல், அதற்கு முன்பாக உள்ள தரையில் காலூன்றித் தாண்டினால், அது தவறல்ல. சரியானதென்றே அறிவிக்கப்படவேண்டும். ஓடிவரும் பாதை (The Runway) 6. ஓடிவரும் பாதையின் குறைந்த பட்ச அகலம் 122 மீட்டர் இருக்க வேண்டும். ஓடிவரும் பாதையின் தூரம் எல்லையற்றது. அதன் நீண்ட தூரம் குறைந்த பட்சம் 40 மீட்டராவது இருக்க வேண்டும். குறிப்பு: இடவசதியிருந்தால், ஓடிவரும் பாதையானது குறைந்த பட்சம் 45 மீட்டராவது இருப்பது நல்லதாகும். 7. ஓடிவரும் பாதையின் சரிவானது அதிக பட்சம்: 1:100 என்ற விகிதத்திற்கு மேற்படாமலும் ஓடிவரும் திசை