பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


குறிப்பு: தலைமை நடுவர், எக்காரணத்தை முன்னிட்டும், நடுவர் (Judge) அல்லது துணை நடுவர் (Umpire) செய்கின்ற வேலையை செய்யக்கூடாது.

3. தலைமை நடுவர் ஒவ்வொரு நடுவருக்கும் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யுமாறு ஒதுக்கித் தரவேண்டும். இப்படி ஏற்கனவே, வேலை ஒதுக்கீடு வரைமுறை செய்யப்படாமல் விடப்பட்டிருந்தால், தலைமை நடுவர் நடுவர்களை அழைத்து, அவர்களது தனிப்பட்ட பணி என்ன என்பதைக் குறிப்பாகக் குறிப்பிட்டுக் கூறவேண்டும். உதாரணத்திற்கு: வட்டத்தைக் கண்காணித்தல், ஓடிவந்து தாண்டும் பலகையின் மீது (Take Off) கண்காணித்தல் போன்றவை) அவ்வாறு ஒதுக்கீடு பணிபெற்ற நடுவரிடம் போட்டியிடும் வீரர்கள் பங்கு பெற அறிவிப்புப் பெற்றிருக்கின்றார்களா. விதிமுறைப்படி எத்தனை வாய்ப்புக்கள் (trails) அவ்வாறு நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதையெல்லாம் தெளிவு படுத்தி பணியாற்ற அனுப்புவதுடன், அவர்கள் சரியாக அளக்கின்றார்களா, அவர்கள் முடிவுகளை சரியாக எடுக்கின்றார்களா, வெற்றியாளர் பட்டியலை சரியாகக் குறித் திருக்கின்றார்களா, அவர்களுக்குள் ஏதாவது மாறுபாட்டில் கருத்துக்கள் எழுந்தால், அவற்றையும் தீர்த்து வைக்கின்ற அத்தனை வேலைகளையும் தலைமை நடுவர் செய்கின்றார்.

4. குறிப்பிட்டப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு தலைமை நடுவராகப் பொறுப்பேற்றிருக்கும் ஒருவர், தான்