பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/170

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 167 தாண்டுபவரது கால் பட்டால், அங்கே கால் பதிந்த அடையாளங்களைக் காட்டுவதற்காக, அந்தப் பலகை பயன்படுகிறது. மேற்கூறிய பிளாஸ்டிசின் பலகை சாதனம் கிடைக்கவில்லை யென்றால், கீழ்க்காணும் முறையினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதைத்தெழும் கோட்டிற்கு முன்புறமாக, 100 மில்லி மீட்டர் அகலத்திற்கு மென்மண்ணையாவது அல்லது மணலையாவது கரைகட்டுவது போல, உதைத்தெழ உதவும் பலகையின் இருபுற எல்லை வரையிலும் வைத்துக்கொண்டு, காரியமாற்றலாம். எளிதாகத் தவறைக் கண்டுபிடிக்கலாம். 11. உதைத்தெழ உதவும் பலகையிலிருந்து, தாண்டிவிழும் பரப்பின் கடைசி எல்லைவரையிலும் உள்ள தூரமானது, குறைந்தது 10 மீட்டராவது இருக்க வேண்டும். 12. தாண்டி விழும் பரப்பின் முன்னெல்லையிலிருந்து குறைந்தது 1 மீட்டர் தூரத்திலாவது உதைத்தெழ உதவும் பலகை பதிக்கப்பட்டிருக்க வேண்டும். 13. அமைப்பு: உதைத்தெழ உதவும் பலகையானது மரத்தால் அல்லது அதற்கிணையான உறுதியான பொருள் ஏதாவது ஒன்றால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் நீளம் 120 மீட்டர் முதல் 122 மீட்டர் நீளம் இருக்கலாம். அதன் அகலம் 1.98 மி.மீட்டர் முதல் 202 மில்லி மீட்டர் வரையும், அதன் உயரம் 100 மில்லி மீட்டரும் இருப்பதுடன், அது வெள்ளை வண்ணப் பூச்சுடனும் விளங்க வேண்டும்.