பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்



போட்டிக்காக 8 போட்டியாளர்கள் அல்லது எட்டுக்கும் குறைவான பேர்கள் வந்திருந்தால், ஒவ்வொரு போட்டியாளருக்கும் 6 வாய்ப்புக்கள் தாண்டிட, வழங்க வேண்டும்.

குறிப்பு: இங்கே சமநிலை (Tie) என்பது ஒரே தூரத்தில் தாண்டியிருப்பதையே குறிக்கும்.

4. முதல் தாண்டல் (Hop) என்பது எந்தக் காலால் உதைத்தெழும் பலகையில் ஊன்றித் தாண்டத் தொடங்கினாரோ, அந்தக் காலினாலேயே தரையில் ஊன்றுவது தான். (இதை தத்துதல் என்றும் கூறுவாள்கள்.)

இரண்டாவது தாண்டல் (Step) என்பது, தரையில் ஊன்றிய காலுக்கு மறுகாலால் தாவி ஊன்றுவதாகும். (இதைத் தாவல் என்பார்கள்).

மூன்றாவது தாண்டல் (Jump) என்பது, ஊன்றிய காலிலிருந்து தாண்டி மணற்பரப்பில் இரண்டு கால்களையும் சேர்த்துத் தாண்டுவதாகும். (இதை முற்காலத்தில் தத்தித் தாவித் தாண்டல் (Hop Step and Jump) கூறி வந்தார்கள்.

இப்பொழுது இதனை மும்முறைத் தாண்டல் (Triple Jump) என்று அழைக்கின்றார்கள்.

5. ஒரு போட்டியாளர் தான் தாண்டுகிற பொழுது, பின்னே தொடர்ந்து வருகிற காலை (Sleeping leg) தரையில் படவிட்டால், அவரது தாண்டும் முயற்சி தவறு (Failure) என்று அளிவிக்கப்படும்.