பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

15


கண்காணிக்கும் களத்தில் (Field) ஏற்படுகின்ற எந்த எதிர்ப்புக்கும் அல்லது போட்டியில் பங்கேற்கிற அல்லது நடத்துகிறதில் ஏற்படுகின்ற மறுப்புக்கும், அவரே முன்னிருந்து முடிவெடுக்கிறார்.

முறைகேடாக நடந்து கொள்கின்ற போட்டியாளரை எச்சரிக்கவும் அல்லது அந்தப் போட்டியிலிருந்தே விலக்கிவிடவும் கூடிய அதிகாரத்தையும் அவர் பெற்றிருக்கிறார்.

எச்சரிக்கப்படுகிற உடலாளர் ஒருவருக்கு முதலில் மஞ்சள் அட்டை காண்பிக் கப்படுகிறது. அந்த போட்டியிலிருந்தே வெளியேற்றப்படுகிற உடலாளருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்படுகிறது. எச்சரிக்கையாக இருந்தாலும் சரி அல்லது வெளியேற்றப்படுவதாக இருந்தாலும் சரி, அந்தக் குறிப்பினைப் போட்டியாளர்களுக்குரிய போட்டி அட்டையில் (competition Card) குறிக்கப்படவேண்டும்.

5) போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்த பிறகு, எதாவது ஒரு சூழ்நிலையின் நிர்ப்பந்தம் காரணமாக, கூட்டம் ஒன்று கூட்டப்பெற்று, 'நீதி வேண்டும்' என்ற நியதியின் அடிப்படையில், நடை பெற்று முடிந்து போன போட்டி நிகழ்ச்சி ஒன்றினை மீண்டும் நடத்திட வேண்டும் என்று குழு முடிவெடுத்தால், அதை நடத்திட இயலாது என்று அறிவித்து மீண்டும் நடத்தாமல் இருந்திட நடுவருக்கு அதிகாரமும் உண்டு.