பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

181


வட்டத்திற்குள்ளே வந்து நிலையாக நின்று பின்னர் எறிய வேண்டும் என்பதைப் பின் பற்றாத போதும் எச்சரித்தும், நீண்டும் புதிய மாதிரி எறியை (Trial) எறியச் செய்ய வேண்டும்.

7. ஒரு எறியாளர் (Thrower) தான் தூக்கி எறிந்த இரும்புக் குண்டானது, தரையில் விழுந்து தொடுவதற்கு முன்பாக, எறிவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது.

எறிந்து முடிந்து, வட்டத்தை விட்டு வெளியே வருகிற எறியாளர், வட்டத்தின் பின்புற அரைப்பகுதியிலுள்ள தரைப்பகுதியின் மூலமாகத் தான் வெளியே வரவேண்டும். அதாவது முன் அரை வட்டப் பகுதியையும், பின் அரை வட்டப் பகுதியையும் பிரிக்கிற நடுக் கோட்டிற்குப் பின்புறப் பகுதியின் வழியே தான் வரவேண்டும்.

8. 40 டிகிரி கோணத்தில் அமைக்கப் பெற்றிருக்கும் எறி பரப்பிற்குள்ளே தான், இரும்புக் குண்டு எறியப்பட வேண்டும். எறி பரப்பினைக் குறிக்கும் கோடுகளின் அளவு 0.05 மீட்டர் அகலமாகும்.

எறிபரப்பின் எல்லைகளைக் குறிக்கும் பகுதிகளில் கொடிகளை ஊன்றி வைத்துக் குறித்திருக்க வேண்டும்.

குறிப்பு: 1. எல்லையில் ஊன்றக் கூடிய எல்லைக் கொடிகள் உலோகத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் வடிவம் செவ்வகமாகவும் (Rectangle), 0.2.மீ X 0.4மீ என்ற அளவில் செவ்வகம் அமைந்திருப்பதுடன்,