பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

17


அமைத்திருக்கிற விதிகளின்படியே, அக்கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், பல்வேறு பட்டப்போட்டி நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்தித் தருவதற்காக, நடுவர்களை நியமனம் செய்து அறிவிப்பார்கள். அந்தந்தப் போட்டி நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பேற்றிருக்கின்ற தலைமை நடுவர்கள் (Referees), நியமிக்கப்பட்டிருக்கும் நடுவர்களுக்குரிய பணிகள் பற்றியும் கடமைகள் பற்றியும் விளக்கிக்கூறவேண்டும்.

ஒட்டப்போட்டிகள், சாலைப்போட்டிகள்

2. ஒட்டப்போட்டிகளைக் கண்காணிக்கின்ற நடுவர்கள், ஒடும் பாதையின் உட்புறப் பகுதியில் நின்றிருந்தவாறு, போட்டியாளர் ஓடிவந்து அல்லது நடந்து வந்து முதலில் முடிக்கின்ற (முதல் இரண்டு மூன்று என்கிற) வரிசையினைக் கண்டறிந்து கூறவேண்டும்.

அவ்வாறு வெற்றிபெற்றவர்களது வரிசையினை கண்டறிந்து கூறமுடியாத அளவுக்குக் குழப்பநிலை ஏற்பட்டால், இதுபற்றிய குறிப்பைத் தலைமை நடுவரிடம் கூறவேண்டும். தலைமை நடுவரே அந்த முடிவுபற்றி இறுதியாக முடிவு கூறுவார்.

குறிப்பு: 1. நடுவர்களாகப் பணியாற்றுகின்றவர்களை, ஓடும்பாதையின் உட்புறக்கோட்டில் இருந்து 5 மீட்டள் தூரம் உட்புறத்தில் நின்று கொள்ளுமாறு நிறுத்தப்படவேண்டும். அப்பொழுது தான், ஒடிமுடிக்கக்கூடிய முடிவெல்லைக் கோட்டில் முதலாவதாக மற்றும் அடுத்தடுத்து ஓடிவருபவர்