பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 192 போட்டிக்கு வந்திருப்பவர்கள் 8 பேர்கள் அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கைக்குள்ளாக இருந்தால், அந்த ஒவ்வொரு போட்டியாளருக்கும் 6 முறை எறியும் வாய்ப்பினை வழங்கி அவற்றில் சிறந்த எறியைக் கண்டறிந்து, வெற்றி நிலையை அறிவிக்க வேண்டும். குறிப்பு : இங்கே சமநிலை என்பது, போட்டியாளர்கள் சிலர், ஒரே தூரத்திற்குத் தட்டெறிந்தால் மட்டுமே கணக்கிடப்பட வேண்டியதாகும். 146ம் விதியில் கூறப்பட்டுள்ள முறைகள் இந்த இடத்திற்குப் பொருந்தி வராது. தட்டெறியும் போட்டிக் களத்தில், ஒவ்வொரு எறியாளருக்கும் இரண்டு முறை எறிந்து பயிற்சி செய்து பார்க்க (PracticalTrials) அனுமதி உண்டு. இரண்டு முறைக்கு மேல் எறிந்து பார்க்க அனுமதி இல்லை. இவ்வாறு எறிந்து பார்ப்பதும் கூட, சீட்டுக் குலுக்கல் மூலம் பெயர்களைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி, அதையும் ஒரு துணை நடுவரின் மேற்பார்வையில் தான் செய்திட வேண்டும். விரும்பியவர்கள், தாங்கள் விரும்புகிறபோது வந்து எறிந்து பார்க்க முடியாது. o போட்டிகள் ஆரம்பித்தப் பின்னர், போட்டியாளர்கள் யாரும், தட்டெறியும் வட்டத்திற்குள்ளிருந்தோ அல்லது வட்டத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்தோ தட்டுடனோ அல்லது தட்டில்லாமலோ எறிந்து பார்க்க அல்லது பழகிப் பார்க்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.