பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் 9. ஒரு போட்டியாளர் எறிகிற ஒவ்வொரு முறையும், அந்த எறி உடனே அளக்கப்படவேண்டும். எறிந்த தட்டு விழுந்த இடத்தின் பின் பகுதியிலிருந்து, (அதாவது எறிவட்டத்தின் உட்புற விளிம்பிலிருந்து மிக அருகாமையில் உள்ள இடத்தில் இருப்பதுபோல) எறிவட்டத்தின் நடுப்புள்ளி வரை, அளவை நாடாவை இழுத்துப் பிடித்து அளந்திட வேண்டும். 10. ஒவ்வொரு எறியாளரும் (Thrower) அதிக மாக எறிந்த தூரத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படியாக, அந்த தூரத்திற்கு சரியாகக் காட்டுகின்ற பக்க எல்லைக் கோட்டில், அல்லது எல்லைக்கோட்டுக்கு வெளிப்பகுதியில், ஒரு கொடியை நட்டுக் காண்பிக்க வேண்டும். அந்தப் போட்டி நடைபெறும் நாளில், உலக சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கும் தூரம் எவ்வளவு அல்லது அந்த நாட்டின் தேசிய சாதனை எவ்வளவு என்பதையும் தெளிவாகத் தெரியும்படி, தனியாகத் தெரிகின்ற வண்ணக் கொடி ஒன்றை நட்டுக் காண்பிக்க வேண்டும். 11. அகசில உலகப் போட் டிகளின் படி நடத்தப்படுகின்ற போட்டிகளில், போட்டியை நடத்துகின்ற பொறுப்பாளர்கள் அளிக்கின்ற எறி சாதனங்களையே 'யன்படுத்திட வேண்டும். அந்த எறி சாதனங்களில், போட்டி சிலடபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே, எந்த வித "ற்றமோ, திருத்தமோ எதுவும் செய்யக்கூடாது.