பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 196 எந்தவிதமான எறி சாதனத்தையும் களப் போட்டி மைதானத்திற்குள்ளே கொண்டு வர அனுமதி கிடையாது. இரணி டு அலி லது அதற்கு மேற் பட் ட எண்ணிக்கையில் நாடுகள் பல கலந்து கொள்கின்ற போட்டிகளின் போது, போட்டியாளர்கள் தாங்கள் கொண்டு செல்கிற எறி சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னர், அந்த சாதனங்களை போட்டி நடத்தும் பொறுப்பாளர்களால் சோதனை செய்து பார்த்து, அங்கீகரிக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட அங்கீகாரம் பெற்ற சாதனங்களை மற்ற போட்டியாளர்கள் யாரும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், பயன்படுத்திக் கொள்கின்ற உரிமையும் அனுமதியும் உண்டு. 12. (அ) இரண்டு அல்லது மூன்று விரல்களை ஒன்றாக இணைத்துத் துணியால் அல்லது பசையுள்ள டேப்பினால் சுற்றிக் கட்டியிருப்பது போன்ற ஒரு காரியத்தை, ஒரு போட்டியாளர் செய்து கொண்டு வந்திருக்கிறாள் என்றால் அதனை அதிகாரிகள் அனுமதிக்கவே கூடாது. எந்தக் காரியம் செய்தாலும், அது எறி சாதனத்தைத் தூக்கி எறிய உதவிகரமாக இருந்து உதவும் என்றால், அந்தச் செயலை அனுமதிக்கவே கூடாது. கையில் காயம் ஏதேனும் இருந்தால், அதனை வெளிப்புறத்திற்குக் காட்டாமல் இருப்பதற்காகக் கட்டுப் போட்டிருந்தால், அதை அனுமதிக்கலாம்.