பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


மீண்டும் நடத்திடவேண்டும் என்று நடுவர் தீர்மானித்தால், போட்டி நடைபெற்று முடிந்த அதே நாளில் நடத்தலாமா அல்லது பின்வரும் நாளில் நடத்தலாமா என்பதைத் தீர்மானித்து முடிவெடுத்து நடத்தும் அதிகாரமும் முழுமையாக நடுவருக்கு உண்டு.

6) களப்போட்டி நிகழ்ச்சிகள் (Field events) நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடமானது, போட்டி நடத்துவதற்குப் பொருத்தமான நிலையில் இல்லையென்று நடுவர் கருதினால், இடத்தை மாற்றி வேறு இடத்தில் நடத்திட அவருக்கு அதிகாரம் உண்டு. அப்படி மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டால், அனைவரும் ஒரு முறை வாய்ப்புப் பெற்று ஒரு ரவுண்டு முடிந்த பிறகே, மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும்.

7) ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சியும் முடிவடைந்த உடனேயே, அந்தப் போட்டியின் முடிவினை சரியாக ஒரு தாளில் எழுதி, பூர்த்தி செய்து நடுவரிடம் கையொப்பம் பெற்று வெற்றி எண் குறிப்பாளரிடம் (Recorder) சேர்த்து விட வேண்டும்.

6. நடுவர்கள் (Judges)
பொதுவிதிகள்

1. ஒலிம்பிக் போட்டிப் பந்தயங்கள் மற்றும் உலகப்போட்டிப் பந்தயங்களைத் தவிர, தேசியக் கழகம் நடத்துகிற போட்டிகளில், தேசியக் கழகம் திட்டமிட்டு