பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் (ஆ) எறி தட்டினை அணிந்து கொள்வது அனுமதிக்கப் படமாட்டாது. (இ) இரும்புக் குண்டைப் பற்றிப் பிடிக்கும் பொழுது, நன்றாகப் பிடி கிடைப்பதற்காக (Grip) பொருத்தமான பொருள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ள, அனுமதி உண்டு. (ஈ) முதுகெலும்புத் தண்டைக் காயம் அல்லது ஏதேனும் அபாயம் நேராமல் காட்பாற்றிக் கொள்ள, தோலால் ஆன பெல்ட் அல்லது அதற்கு இணையான வேறு ஏதாவது ஒன்றை அணிந்து கொண்டால், அதற்கு அனுமதி உண்டு. 13. ஒரு போட்டியாளர் தட்டை எறிகின்ற எறிவட்டத்திற்குள்ளே, எந்தவிதமான பொருளையும் தெளிப்பதோ அல்லது தனது காலணிகளுக்குள் இட்டுக் கொள்வதோ கூடாது. அந்தச் செயல் அனுமதிக்கப்பட மாட்டாது. 14. ஒரு போட்டியாளர் எறிந்த தட்டினை விழுந்த இடத்திலிருந்தே அதனை மீண்டும் (திரும்பவும்) எறி வட்டம் நோக்கி யாரும் எடுத்து எறியக் கூடாது. அங்கிருந்து கொண்டு வந்துதான் கொடுக்க வேண்டும். 15. தட்டின் அமைப்பு : எறி தட்டின் உடலமைப்பு மரத்தால் அல்லது அதற்கு இணையான பொருள் ஒன்றால் செய்யப்பட்டு, அதன் ஒரம் (Rim) (விளிம்பு) உலோகத்தினால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். தட்டின் ஒரம் கூரிய முனை கொண்டதாக அல்லாமல், வட்டமான அமைப்பு கொண்டதாக இருக்க