பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் _-- எறிவட்டத்தின் உட்புறத் தரையானது சமத்தரையாக இருப்பதுடன், வட்டத்தின் முற்பகுதித் தரையைவிட, s முன்புறத் தரைப்பகுதி 20 மில்லி மீட்டர் (6 மில்லி மீட்டர்) அளவு குறைந்த உயரம் உள்ளதாக இருக்கலாம். 18. அளவுகள் : எறிவட்டத்தினுடைய விட்டத்தின் உட்புற அளவானது 2.50 மீட்டராகும். வட்டத்தின் சுற்றுக் கோடாக இருக்கும் இரும்புக் கரையின் (Rim) கனமானது 6 மில லி மீட் டராகவும் , அதன் மேற் பகுதி வெள்ளைப்பூச்சுடனும் இருக்க வேண்டும். 19. எறிவட்டத்தின் சரிபாதியாக உள்ள நடுப் பகுதியில் இருபுறமும், உள்ள உலோகக் கரையிலிருந்து வெளிப்புறமாக 0.75 மீட்டர் தூரம் இரு பக்கத்திலும் நீட்டி விடுகிறபோது, அந்த வெள்ளைக் கோடு 50 மில்லி மீட்டர் அகலத்துடன் போடப்பட வேண்டும். அந்தக் கோட்டினை வெள்ளை வண்ணப் பூச்சுள்ளதாக வைக்கலாம். அதே சமயத்தில் மரத்தால் அல்லது அதற்குப் பொருத்தமான பொருளால் அந்தக் கோட்டினைப் போட்டு வைக்கலாம். வட்டத்தின் நடுக்கோட்டுக்கு நேராக இருபுறமும் பக்க வாட்டில் நீட்டப்பட்ட கோடுகளானது, செங் கோண (நேர் க் கோண) அளவுடன் அமைக்கப்படவேண்டும் oa-flat-offs ownlow (Discus Throwing Cage) 1. எல்லா தட்டெறிகளும், சுற்றி வளைக்கப்பட்ட *ற்று வலைக்குள்ளேயிருந்து தான் எறியப்படவேண்டும்.