பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 202 2. 2 கிலோ கிராம் எடையுள்ள தட்டானது. நொடிக்கு 25 மீட்டர் வேகத்தில் செல்கிறபோது, அதைத் தடுத்து நிறுத்துகிற சுற்றுவலையானது, அறுந்துபோகாமல் தாங்கிக் கொள்கின்ற வலிமை வாய்ந்த சுற்றுவலையாக, வடிவமைத்து, தயயர் செய்து கொள்ளலாம். எந்த விதமான வழவமைப்புடன் தயார் செய்திருந்தாலும், வலையில் மோதி விழுகின்ற தட்டானது வலையைப் பொத்துக் கொண்டு போய் விடாமலும், இருக்கின்ற வலிமையான வலையாகவே அமைக்கப்படவேண்டும். எவ்வாறிருந்தாலும், இவ்விதியில் குறிப்பிட்டிருக்கும் முறைகளின்படியே சுற்றுவலை அமைந்திருக்க வேண்டும். 3. அமைப்பில் U வடிவமுள்ளதாக வலை அமையும். அந்த வலை 6 பிரிவுடையதாக (Panel) இருக்கும். வலையின், அகலம் 3.17 மீட்டராகும். வலையின் முன்புறம் (வாய்புறம்) 6 மீட்டர். வலையின் மேற்புறம் (Top) 5 மீட்டர். அதாவது தட்டு எறிவதற்குரிய வட்டத்தின் மேற்புறத்தின் உயரம் 5மீ. ஆகும். வலையின் குறைந்த பட்சபிரிவானது 4 மீட்டராகும். படம் பார்க்க. வேகத்துடன் எறிப்படுகின்ற தட்டானது, வலையின் இணைப்புகளில் (Joints) மோதும்போது, பிளவுபட்டு, தட்டு வெளியேறி விடாத வணி ணம் வலை, மிகுந் த வலிமையுள்ளதாக வடிவமைக்கப்பட வேண்டும்.