பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 208 வேண்டும். அதே சமயத்தில், கைவிரல்களின் நுனிப்பகுதிகள் வெளியே தெரியும் வண்ணமே கையுறையில் உள்ள விரல்கள் செல்லும் பகுதியானது, மேற்புறம் மூடியிருக்காமல், விரல்களின் நுனிப்பாகம் வெளியே வந்து, பார்வைக் குத் தெரியும் படியாக இருப்பது போல அமைந்திருக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட விரல்களை ஒன்றாக சேர்த்துக் கட்டிக் கொண்டிருப்பது, சங்கிலிக் குண்டினை நன்றாகச் சுழற்றி எறிய உதவுகிறது போல அமைந்திருக்கிறது என்பதாக இருந்தால், அது போன்ற செயல்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு எறிகின்ற எறியானது தவறானது என்று அறிவிக்கப்படும். கையில் கட்டுத்துணி (Tape) எதையும் கட்டிக் கொள்ள அனுமதி இல்லை. ஏதாவது கையிலே காயம் இருந்து, அதனை மூடுவதற்காகக் கட்டுத் துணியைக் கொண்டு கட்டியிருந்தால், அது அனுமதிக்கப்படும். முதுகெலும்புக்கு ஏதாவது அதிர்ச்சியால் காயம் ஏற்படலாம் என்பதற்காக, தற்காப்புக்காக பெல்ட் அல்லது இடைவாள் அல்லது அது போன்ற பொருத்தமான பொருளால் கட்டிக் கொள்ள, அனுமதியுண்டு. சங்கிலிக் குண்டினை சுழற்றி எறிய, நன்றாகப் பிடிப்பு (Grip) வேண்டும் என்பதற்காக, கையில் அல்லது கையுறையில் ஏதாவது பொருத்தமான பொருளைப் பயன் படுத்திக் கொள்ள அனுமதி யுண்டு. தனக்கு சாதகமாக உதவவேண்டும் என்பதற்காக, எறி வட்டத்திற்குள்ளே அல்லது அணிந்திருக்கும் காலணிக்குள்ளே எந்த விதமான பொருளையும் தெளிப்பதோ அல்லது பரப்பி வைப்பதோ கூடாது.