பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 214 அதிக பட்சம் 1:1000 என்ற அளவுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்தப்படுகிற சங்கிலிக்குண்டுகள் 17. அகில உலகப் போட் டிகளின் படி நடத்தப்படுகின்ற போட்டிகளில், போட்டியை நடத்துகின்ற பொறுப்பாளர்கள் கொடுக்கின்ற சங்கிலிக்குண்டுகளைப் பயன்படுத்திடவேண்டும். அந்த சங்கிலிக் குண்டுகளில், போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே எந்தவிதமான மாற்றமோ தரிருத்தமோ எதுவும் செய்திடக்கூடாது. அந்தப் போட்டியாளரும் எந்தவிதமான எறிசாதனங்களையும், போட்டி மைதானத்திற்குள்ளே கொண்டு வர அனுமதி கிடையாது. இரண டு அல்லது அதற் கும் மேற் பட்ட எண்ணிக்கையில் நாடுகள் பல கலந்து கொள்கின்ற போட்டிகளின் போது, போட்டியாளர்கள் தாங்கள் கொண்டு செல்கிற சங்கிலிக் குண்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படிப்பட்ட சங்கிலிக் குண்டுகளை, போட்டியை நடத்துகின்ற பொறுப்பாளர்களால் சோதனை செய்து, சரிபார்த்து அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட சாதனங்களை மாற்ற போட்டியாளர்கள் யாரும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், பயன்படுத்திக் கொள்கின்ற உரிமையும் அனுமதியும் உண்டு. சங்கிலிக் குண்டின் அமைப்பு 18. ஒரு சங்கிலிக் குண்டு 3 பாகங்களைக் கொண்டதாகும்.