பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் 1. இரும்புக்குண்டு, 2. இரும்புச் சங்கிலி, 3. கைப்பிடி இரும்புக்குண்டு (Head): 19. இரும்புக்குண்டு என்பது சங்கிலிக் குண்டின் தலை என்று அழைக்கப்படுகிறது. அது உறுதியான இரும்பு, அல்லது அதற்கு இணையான உலோகத்தால் ஆனதாக, ஆனால் பித்தளை உலேகத்திற்கும் குறைவில்லாத ஏதாவது ஒரு உலோகப்பொருளால், செய்யப் பட்டதாக இருக்க வேண்டும். அல்லது இரும்புக்குழி உட்பாகத்திற்குள் ஈயத்தை உருக்கி ஊற்றியதாக அல்லது அதற்கிணையான பொருளை நிரப்பியதாக ஆக்கப்பட்ட இரும்புக்குண்டு, அதன் வட்டம் 116 மில்லி மீட்டர் கொண்டதாகவும். முழுக்க முழுக்க உருண்டை வடிவம் உள்ளதாகவும் அமைந்திருக்க வேண்டும். உலோகத்தை உருக்கி ஊற்றி நிரப்பப்பட்டதாக செய்யப்பட்ட இரும் புக் குண்டில், சங்கிலிக் கம்பி சேர்க்கப்படுவதற்காக இணைக்கும் போது, அதனுடைய புவி ஈர்ப்புத்தானம் இரும்புக்குண்டின் நடுப்பாகத்திலிருந்து 6 மில்லி மீட்டருக்கு மேல் இல்லாமலும், அசையாமல் இறுக்கமாகப் பிடித்திருப்பது போலவும் அமைந்திருக்க வேண்டும். சங்கிலிக்கம்பி (Wire): - சங்கிலிக் கம்பியானது ஒரே கம்பியான உடைந்து போகாத நீண்டிருக்கும் நீளம் உள்ளதாக நெகிழ்ந்து நீண்டுவரும் (Spring) கம்பியாக இருக்க வேண்டும். அந்தக் கம்பியானது 3 மில்லி மீட்டர் விட்டம் உள்ளதாக அல்லது நம்பர் 11 ஸ்டாண்டார்டு ஒயர் காஜ் என்பதால் ஆனதாகவும் இருக்க வேண்டும். அத்துடன், சங்கிலிக் குண்டை சுழற்றி விசும் போது நீண்டு கொள்ளும் தன்மையில்லாத