பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

19


குறைந்தது இரண்டு நடுவர்களாவது, தாண்டுகின்றவர்களின் தாண்டும் வாய்ப்புகள், வெற்றிகள் பற்றிய குறிப்புக்களைக் குறிப்பதுடன், ஒவ்வொரு சுற்றும் (Round) முடிந்த பிறகு, அந்தக் குறிப்புகள் சரியாக இருக்கின்றனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

உயரக் குறுக் குக் கம்பத்தைத் தாண்டிக் கடந்துவிட்டாரா என்பதை வெள்ளைக் கொடிமூலம் அல்லது சிவப்புக் கொடிமூலம் அல்லது அசைத்துக் காட்டிடும் கடமையில் ஒரு நடுவர் இருக்க வேண்டும். அவரது கொடி அசைவுக்குப் பிறகே, தகுந்த முடிவு எடுக்க வேண்டும்.

துணை நடுவர்கள் (Umpires) ஒட்டப் போட்டிகளுக்குரிய துணை நடுவர்கள் 1. துணை நடுவர்கள் அனைவரும் தலைமை நடுவருக்குத் துணையாக இருந்து உதவி செய்பவர்கள் ஆவார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான முடிவெடுக்கும் அதிகாரங்களும் கிடையாது.

2. மிகவும் அருகிலிருந்துக் கண்காணித்து முடிவு கூறக் கூடிய இடத்தில் தலைமை நடுவர் இணை நடுவர்களை இடம் காட்டி நிறுத்தி வைப்பார். அந்த இடத்தில் இருந்து கொண்டு, போட்டியாளர்கள் ஏதாவது தவறோ அல்லது விதி மீறல்களோ செய்கின்றார்களா என்பதனைக் கண்டு தெளிந்து, அவ்வாறு நடைபெற்றது என்றால், உடனே எழுத்து மூலமாக தலைமை நடுவருக்கு அறிவித்துவிட வேண்டும்.