பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 218 அமர்ந்திருந்து பார்க்கிறபொழுது, மற்ற எல்லா போட்டி நிகழ்ச்சிகளும் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கான பாதுகாப்பு முறைக்கு உகந்த முறைகளாகும். மேற்கூறிய வண்ணம் இப்படிப்பட்ட சூழ்நிலை அமையாதபோது, பழக்கப் பயிற்சிகள் நடைபெறுகின்ற சமயத்தில், மிகவும் சாதாரணமாக சுற்று வலை அமைந்திருந்தால், அதுவே போதுமானது, இதுபோன்ற சுற்று வலை அமைக்கிறபோது, தேவையானால், அமைக்கும் யோசனைகளையும், அறிவுரையையும் பெற, தேசியக்கழகம் அல்லது அகில உலக அமெச்சூர் கழகத்தின் செய்தி நிறுவனத்துடன் (Bureau) தொடர்பு கொண்டு பெறலாம். 2.7.265 கிலோ கிராம் எடையுள்ள 110 மி. மீட்டள் விட்டமுள்ள சங்கிலிக் குண்டானது, நொடிக்கு 29 மீட்டள் வேகத்தில் செல்கிறபோது, அதை வெளிப்புறம் செல்லாது தடுத்து நிறுத்துகிற சுற்று வலையானது, அறுந்து போகாமல் தாங்கிக் கொள்கிற வலிமை வாய்ந்த சுற்று வலையாக வடிவமைத்து, தயார் செய்து கொள்ளலாம். வீசுகிற சங்கிலிக் குண்டானது சுற்று வலையின் மீது பட்டு ம்ேர்திய பிறகு, எதிர்த்து வந்து எறிந்த போட்டியாளர் மீதே வந்து தாக்கிடாத வண்ணம்; சுற்று வலையின் உச்சிப் பகுதியில் மோதி பொத்துக் கொண்டு வெளியே போய்விடாத வண்ணம், சுற்று வலையின் அமைப்பு வலிமையுடன் இருக்க வேண்டும். மேற்கூறிய பாதுகாப்பு முறைகள் அடங்கிய விதி முறைகளின் படியே, சுற்று வலைக் கூண்டு அமைக்கப்பட வேண்டும். 3. சுற்று வலைக் கூண்டு U வடிவமுள்ளதாக அமைந்திருக்கிறது. அந்த வலை குறைந்தது 7 பிரிவுகளாக