பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 232 மற்ற பொடிகளுக்கு மாறுபட்ட வண்ணத்தில் அமைந்த ஒரு கொடியை, அந்தப் போட்டி நிகழ்ச்சிக்கான உலக சாதனை அல்லது தேசிய சாதனையின் தூரத்தைக் குறித்துக் காட்டுவதற்காகவும் ஊன்றி வைத்திருக்க வேண்டும். உதவுகிற எறி சாதனம் 13. அகில உலகப் போட்டிக்கான விதிகளின் படி நடத்தப்படுகிற போட்டிகளில், போட்டியை நடத்தும் பொறுப்பாளர்கள் கொடுக்கின்ற எறி சாதனத்தை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். அத்தகைய சாதனங்களை, போட்டி நேரத்தில் எந்த விதமான மாற்றமோ அல்லது திருத்தமோ செய்யக் கூடாது. அதையும் தவிர, தங்களுக்கு சொந்தமான அல்லது எந்த விதமான எறி சாதனத்தையும் எறிகளத்திற்குள்ளே கொண்டு செல்லவே கூடாது. இரண டு அலி லது அதற் குத் மேற் பட்ட நாடுகளுக்கிடையே போட்டிகள் நடைபெறும் போது, போட்டியாளர்கள் தாங்கள் கொண்டு வருகிற எறி சாதனத்தைப் பயன்படுத்தி எறிய அனுமதி உண்டு. அத்தகைய எறிசாதனங்கள், போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, போட்டியாளர்களால், சரிபார்த்து சோதனையிட்டு, அனுமதியை வழங்கியிருக்க வேண்டும். இத்தகைய சாதனங்களை மற்ற போட்டியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், எடுத்துப் பயன்படுத்துகின்ற வகையில் கொடுத்துதவ வேண்டும்.