பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 234 குறிப்பு: வேலின் அமைப்பு வட்டமான வடிவம் கொண்டது. அந்த வட்டவடிவத்தில் தலைப்பகுதி அதிக விட்டம் உள்ள பகுதியாகவும், வால் பகுதி குறைந்த விட்டம் உள்ள பகுதியாகவும் காணப்படுகிறது, அப்படிப்பட்ட வித்தியாசம் 5 விகிதத்திற்கு மேல் போகக் கூடாது. 17. வேலினை உருவாக்கும் பொழுது, அதில் அசைந்து நெகிழ்த்துவிடும் விதத்தில் எந்தவிதமான இணைப்பும் இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட நெகிழ்ந்து தரும் இணைப்பு, வேலின் புவி ஈர்ப்பு தானத்தை மாற்றிவிடுவதுடன், எறியும் போது செல்ல வேண்டிய தன்மைகளை மாற்றிவிடக் கூடும் என்பதால், இப்படிச் செய்திட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது, 18. வேலின் வடிவம் பற்றி அளவு முறைகள் பின் வருமாறு: