பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 6 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 28. நடைப்போட்டி (Walking) (விதி 191) 1. நடைப்போட்டி என்பது, எடுத்து வைக்கும் காலடிகளில் ஏதாவது ஒரு கால் தரையில் இருப்பது போல தொடர்ந்து தரையுடன் தொடர்பு கொண்டு விரைவாக நடத்தல் என்பதாகும். ஒவ்வொரு காலடியிலும் (Step) முன்னேறிச் செல்லும் முன்புறக் காலானது தரையுடன் தொடர்பாக இருக்க; நடப்பவரின் பின்புறக் காலானது தரையை விட்டு நீங்கி முன்புறம் எடுத்து வைக்க வந்திட வேண்டும். ஒவ்வொரு காலடி எடுத்து வைக்கும் பொழுதும் தரையில் உள் ள கால மடங் காம ல நேராக நிமிர் ந் து வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது முழங்கால் பகுதியை மடக்கக் கூடாது. குறைந்த நொடியாவது கால் மடங்காமல் இருக்க வேண்டும். குறிப்பாக, உடலைத் தாங்குகிற காலானது நேராகவும், அதே சமயத்தில் விறைப்பாகவும் இருக்க வேண்டும். 2. கண்காணித்தலும், தகுதியற்றது என்று தீர்மானித்தலும்: நடைப்போட்டியைக் கண்காணிக்கின்ற துணை நடுவர்களுக்கு இடையே, தலைமை நடுவர் ஒருவரைத்