பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் _--— தேவையானால் , முதலில ஒரு குழுவை ஒடுவதற்காக அமைத்த பிறகு, மீண்டும் பரிசீலனை செய்து குழுக்களைப் பிரித்து ஓடவிட, தலைமை நடுவருக்கு அதிகாரம் உண்டு. 6. அகில உலக அமெச்சூர் கழகம் ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சிக்கும் விதிமுறைகளைத் தெளிவாகக் குறித்துக் காட்டியிருக்கிறது. ஆனால், டெக்காதலான் போட்டி நிகழ்ச்சிகளுக்காக, விதி முறைகளில் சில விதி விலக்குகள் பெற்றிருக்கின்றன. அந்த விதி விலக்குகள் பின்வருமாறு அமைந்துள்ளன. (அ) நீளத் தாண்டல் மற்றும் எறி போட்டி நிகழ்ச்சிகளுக்கு, ஒவ்வொரு போட்டியாளரும் 3 முறை தாண்ட அல்லது எறிய வாய்ப்புகள் பெறுவார்கள். (ஆ) ஒவ்வொரு போட்டியாளரும் ஓடுகிற நேரத்தைக் கணக்கிட, 3 நேரக்காப்பாளர்கள் தனித்தனியாக நேரம் எடுத்து கணக்கிடுவார்கள். ஏதாவது ஒரு காரணத் தினால் , இரணி டு கடிகாரங்கள்தான் இயங்கி நேரத்தைக் கணக்கிட்டிருந்தால், அந்த இரண்டு கடிகாரங்களும் குறித்திருந்த நேரத்தில், எந்த நேரம் அதிகமாக இருக்கிறதோ, அந்த நேரம் தான் அதிகார பூர்வமான நேரம் என்பதாக அறிவிக்கப்படவேண்டும். H தானியங்கி மின்சாரக் கடிகாரம் (Automatic Electrical) மூலமாகவும் நேரம் பார்த்து, நேரத்தைக் குறித்துக் கொள்ளலாம். (இ) தடைதாண்டி ஓட்டத்திற்காகவும் ஒட்டப் போட்டிக்காகவும் மேற்கொள்கிற தொடக்கத்திற்காக, 3