பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் அவ்வாறும் சமநிலை தீர்க்கப்பட முடியவில்லை என்றால், ஏதாவது ஒரு போட்டியில் மிக அதிகமான வெற்றி as Go 3560) 6TL) (Highest Number of Points) பெற்றிருக்கிறவரே, வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவாள். இப்படிக் கணக்கிடப்படும் முறையானது, சமநிலை எழுந்த எந்த வெற்றி நிலைக்கும் (Place) பொருந்தும். 10. ஏழு நிகழ்ச்சிகள் அடங்கிய ஹெப்டாதலான் போட்டியில் அல்லது பத்து நிகழ்ச்சிகள் உள்ள டெக்காதலான் போட்டியில், ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் கலந்து கொள்ளத் தவறிவிட்டால் (Failing), அவர் மற்றப் போட்டிகளில் தொடர்ந்து போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார். அவர் அந்தப் போட்டியினின்றும் விலகிக் கொண்டார் என்று கருதப்படுவதுடன், அவரது வெற்றி எண்கள் இறுதிப் போட்டிகள் முடிந்து முடிவு வெளியாகும் போது, கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.