பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


இரண்டாம் தசம எண்களில் 0 என்பதில் இல்லாமல் இருந்தால், அதனை அடுத்த உயர்ந்த எண்ணிக்கையைக் காட்டும் எண்ணில் தான் குறிக்க வேண்டும். அதாவது 10.11 என்று வந்தால், அதை 10.2 என்று தான் குறித்துக் காட்ட வேண்டும்.

8. நேரம் எடுக்கும் முறையாவது: துப்பாக்கியிலிருந்து சத்தம் கேட்டதும் அல்லது புகை வெளிவரக் கண்டதும் கடிகாரத்தை ஓடவிட்டுத்துவக்கி, முடிவு எல்லையைக் காட்டும் கோட்டின் கடைசி பகுதியில் ஓடி வருபவர்களது உடலின் (அதாவது தலை, கழுத்து, கைகள், கால்கள், கைகள் கால்களின் மேற்பகுதி) ஒரு பகுதியாவது கடக்கிறபொழுது, ஒடும் கடிகாரத்தை நிறுத்திவிடவேண்டும்.

9. நேரக்காட்பாளர்கள் அனைவரும், முடிவெல்லைக் கோட்டுக்கு நேராக, ஓடுகளப்பாதைக்கு வெளிப்புறமாக, குறைந்தது 5 மீட்டர் தூர அளவில் இருக்க வேண்டும். அப்பொழுது தான் ஓடிவருபவர்களது தோற்றம், நிலை எல்லாம் தெளிவாகக் காண முடியும். முடிவெல்லைக் கோட்டுக்கு நேராக உயர்த்தப்பட்டுள்ள தாங்கிகளில் (Stand) அவர்கள் அமர்ந்திருந்தால், இன்னும் பார்க்க சிறப்பாக இருக்கும்.

புகைப்பட முடிவுகூறும் நடுவர்கள்
(Photo Finish Judges)

முழுவதும் எலக்ட்ரானிக் கடிகாரம் மூலமாக நேரம் பார்க்கிறபொழுது: