பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

25


1. முழுவதும் தானாகவே இயங்குகிற எலக்ட்ரானிக் கடிகாரங்களைப் பயன்படுத்துகிறபொழுது, அந்தக் கடிகாரம் 'ஓட்டத் தொடக்கத்தில் ஒடத்தொடங்கி, ஒட்டம் முடியும் போது தானாகவே நின்று விடுகிறது. மற்ற வகையான கடிகாரங்கள் எல்லாம் , பணியாற்றுகிற செயல்முறைகளுக்கு ஏற்ப, அது கைக் கடிகாரம் மூலமாக நேரம் கணிக்கப்படுகிறது என்றே அறிவிக்கப்படும். அல்லது அந்த நேரம் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்படலாம்.

2. எந்த இடத்தில் போட்டிகள் நடைபெறுகின்றனவோ, அந்த இடத்திற்குரிய நாட்டின், தேசியத் தலைமைக் கழகமானது பயன்படுத்தப்படுகிற தானியங்கி எலக்ட்ரானிக் கடிகாரத்தினை ஏற்றுக்கொண்டு, ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.

அத்தகைய தானியங்கும் எலக் ட்ரானிக் கடிகாரமானது, ஓடவிடுபவர் உபயோகிக்கும் துப்பாக்கி உடன் தொடர்புள்ளதாக இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். அல்லது துப்பாக்கி ஒலிக்கிறபோது நேரத்தைக் கணித்திடும் வகையில் மற்ற அமைப்பு முறைகள் ஏதாவது ஒன்றினைச் செய்திருத்தல் வேண்டும்.

ஒட்டம் முடிவுபெறுகிற எல்லைக் கோட்டிற்கு சரி நேராக காமிராக்கள் வைக்கப்பட்டு, ஆரம்பம் முதல் தொடர்ந்து முடிவுபெறும் வரையில் புகைப்படம் எடுக்கின்ற வகையில் இருந்திடவேண்டும். அந்தப் புகைப்படமானது