பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


ஒரே சீராக இருக்கின்ற முறையிலே 1/100 என்ற நொடிக் கணக்கைக் காட்டுகின்ற தன்மையில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்ற இடத்தையும், நேரத்தையும் படம் பார்த்து அறிந்து கொள்ளத் தக்க வகையில், படம் முழுமையாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும்; 1/100 என்று நொடியினைப் பிரித்தறிகின்ற அளவு முறைப்படி அமைந்திடவேண்டும்.

3. தலைமை புகைப்படத் தேர்வு நடுவர் தான் இவ்வாறு நேரம் கண்டறியும் பணிகளைச் செய்திடும் முழு பொறுப்புள்ளவராக இருக்கிறார். இவருக்காக துணைபுரிய இருக் கும் 2 உதவியாளர் களின் துணையுடன் போட் டியாளர் கள் இருக் கின்ற இடங் களையும் அவரவர்களுக்குரிய நேரங்களையும் குறித்துத் தீர்மானித்து, நடைமுறைப்படுத்துகிற வாய்ப்பினையும் பெற்றிருக்கிறார்.

4. வாய்ப்பும் வசதியும் இருந்தால், இரண்டு காமிராக்களை, முடிவெல்லைக் கோட்டின் இருபுறமும் (ஒவ்வொன்றாக) வைத்து, நேரத்தையும் முடிவையும் அறியப்பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு: இவ்வாறு பயன்படுத்த தானியங்கி எலக்ட்ரானிக் கடிகாரம் சரியாக பணியாற்றி நேரம் குறிக்கத் தவறிப் போகின்ற சூழ்நிலைகள் அமையலாம் என்பதால், இப்பணியின் இடையிலே கைக்கடிகாரத்தின் மூலமாகவும் நேரம் எடுக்கின்ற வேலையையும் நடத்திக் கொள்ளலாம்.