பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அழைக்கும் உதவியாளர்களை, ஒட விடுபவர் வைத்துக்கொள்ளலாம்.

குறிப்பு: 200 மீட்டர், 400 மீட்டர், 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம், 4x100 மீட்டர் தொடரோட்டம் போன்ற பந்தயங்களுக்கு, 2 திருப்பி அழைக்கும் உதவியாளர்களை, ஒட விடுபவர்கள் உதவிக்காக வைத்துக் கொள்ளலாம்.

4. திருப்பி அழைக்கும் உதவியாளர்கள் ஓட்டத் தொடக்கத்தை சரியாகவும் நெறியாகவும் நடத்திட, ஓடவிடுபவருக்கு உதவும் வகையில் நடந்திட வேண்டும். ஏதாவது ஒரு ஓட்டத்தின் தொடக்கம், விதிமுறைகளுக்கு ஏற்ப சரியாகத் தொடங்கப்படவில்லை யென்றால், தனது வசம் உள்ள துப்பாக்கியை இயக்கி வெடித்து, அவர்களைத் திரும்ப அழைக்கும் வண்ணம் ஒலியெழுப்பி அழைக்கலாம். இவ்வாறு திரும்பி அழைக்கும் கடமையை, ஓடவிடுபவரும் ஆற்றலாம்.

5. திரும்ப அழைக்கும் உதவியாளர்கள், எல்லா ஒட்டக்காரர்களும் ஒரே சமயத்தில் ஒட்டத்தைத் தொடங்குகின்றார்களா என்று கண்டறிய, அதற்குரிய தகுந்த இடமாகப் பார்த்து நின்று கொண்டு கண்காணிக்க வேண்டும்.

6. தவறாக ஓடத் தொடங்குகிறவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பது, மீறினால் அவர்களை ஒட்டப் போட்டியிலிருந்து பங்கு பெறாமல் வெளியேற்றுவது போன்றவற்றை ஒட விடுபவர் மட்டுமே செய்ய முடியும்.