பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


தவறான ஓட்டத் தொடக்கம் நேர்ந்தால், மீண்டும் எல்லா ஒட்டக்காரர்களையும் அவரவர் ஓடுமிடத்திற்கு வரவைக்கும் வேலையை உதவியாளர்கள் செய்திட வேண்டும்.

3. தொடரோட்டப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியின் முதல் ஒட்டக்காரர்கள் கையில குறுந் தடியைத் (Baton) தருவது, உதவியாளர்களின் தலையாய கடமையாகும்.

4. ஓட விடுபவர் தனது முதல் கட்டளையான 'உங்களிடத்தில் நில்லுங்கள்' என்று உரக்கக் கூறியவுடன், ஒட விடுபவரின் உதவியாளர்கள், ஒவ்வொரு ஒட்டக்காரரும் அவரவரது ஓடத் தொடங்கும் கோட்டின் மேலாவது அல்லது முன்புறமாவது தமது விரல்கள், கைகள், கால்கள் எதையும் வைத்திராமல், சரியாகக் கோட்டிற்குப் பின்புறத்தில் நிற்கின்றார்களா என்பதைக் கண்காணித்து, உறுதி செய்திட வேண்டும்.

அவ்வாறு நிற்க வைப்பதில் ஏதாவது பிரச்சினை எழுந்தால், அதனை உடனே ஓட விடுபவருக்குத் தெரிவித்து விட வேண்டும்.

வட்டக் குறிப்பாளர்கள்
(Lap Scorers)

1. 1500 மீட்டர் முதல் 5000 மீட்டள் வரை உள்ள ஒட்டப்பந்தயங்களில், ஒரு வட்டக் குறிப்பாளர், ஒவ்வொரு ஒட்டக்காரரும் ஓடி முடித்த வட்டத்தை (Lap) கவனித்துக் குறித்துக் கொள்கின்ற கடமையாளராக விளங்குகிறார்.