பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

33


5000 மீட்டர் தூரத்திற்கு மேலாக உள்ள ஒட்டப்பந்தயங்கள் மற்றும் நடைப் போட்டிகளுக்கு, தலைமை நடுவரானவர் தேவையான வட்டக் குறிப்பாளர்களைத் தேர்வு செய்து, உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பார். அந்த வட்டக் குறிப்பாளர்கள், தங்களுக்குத்தரப்பட்டிருக்கும் குறிப்பட்டையில், அந்தந்த ஓட்ட வீரர்களைக் கண்காணித்து நேரம் எடுக்கின்ற நேரக்காப்பாளருடன் இணைந்து செயல்பட்டு, அவள் தருகின்ற, தமது குறிப்பட்டையில் குறிக்க வேண்டும்.

ஒரு வட்டக் காப்பாளர், ஒரு ஒட்டப் போட்டியின் போது, 4 ஓட்டக்காரர்களுக்கு மேல் கண்காணிக்கக் கூடாது.

நடைப் போட்டி என்றால் ஒரு வட்டக் காப்பாளர் 6 போட்டியாளர்களைக் கண்காணிக்கலாம்.

2. ஒவ்வொரு ஒட்டக்காரரையும் கண்காணிக்கிற ஒரு வட்டக் குறிப்பாளர்களுக்கு மேலாக, ஒவ்வொரு ஒட்டக்காரரும் இன்னும் எத்தனை வட்டங்கள் ஓடி முடிக்க வேண்டும் என்பதைக் கண்காணித்துத்தெரிவிக்க, ஒரு சிறப்பு வட்டக் குறிப்பாளர்களை (Special Lap Scorer) தலைமை நடுவர் நியமித்துக் கொள்ளலாம். இந்த சிறப்புக் குறிப்பாளர், ஒவ்வொருவரின் கடைசி வட்டம் வரும்போது ஒரு மணியை (bell) அடித்து, ஒலி எழுப்பி அறிவிக்கலாம். அல்லது வேறு ஏதேனும் சைகை அல்லது ஒலி மூலமும் தெரிவிக்கலாம்.