பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

35


உதவியாளர்களாக இருப்பவர்களை, சரியாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், ஒவ்வொருவருக்கும் உரிய கடமை என்ன என்பதையும் தெளிவாகக் கூறி வழிநடத்திச் செல்ல வேண்டும்.

போட்டிகள் நடைபெறாத நேரத்தில் ஒய்வாக இருக்கும் அதிகாரிகளுக்கு, அமர்ந்திருந்து பார்க்க, இடவசதியை செய்து தருவதும் இவரது கடமையாகும்.

அறிவிப்பாளர்
(The Announcer)

நடக்க இருக்கும் போட்டி நிகழ்ச்சிகள் பற்றி விபரங்களை பொதுமக்களுக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் அறிவிக்கின்ற கடமையாளராக, அறிவிப்பாளர் இருக்கிறார்.

நடைபெற இருக்கும் போட்டி நிகழ்ச்சியின் பெயர், அதில் பங்கு பெறும் போட்டியாளர்களின் பெயர்கள், அவை தொடர்பான தேர்வுப் போட்டிகள் (Heats), போட்டியாளர்கள் நின்று ஒடக்கூடிய ஒடும் பாதைகள், எந்தெந்த போட்டியாளர்கள் எந்தெந்த ஓடும் பாதையில் என்பன போன்ற விவரங்களை அவ்வப்போது தெளிவாக அறிவிப்பாளர் அறிவிக்க வேண்டும்.

ஒரு போட்டி நிகழ்ச்சியின் முடிவு தெரிந்த பிறகு சிசில் வெற்றி பெற்றவர்கள், அவர்கள் செய்திருக்கும் சாதனையின் நேரங்கள், உயரங்கள், தூரங்கள் இவற்றை தெளிவாக எல்லோருக்கும் அறிவித்திட வேண்டும், அதாவது,