பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



40

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


3. போட்டியிடும் விதிமுறைகள்
(Competition)
(விதி 142)

1. அகில உலகக் கழகத்து விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட விளையாட்டு உதவி சாதனங்களைக் கொண்டு ஏற்படுத்தப்படுகிற சாதனைகள் தான் ஏற்றுக்கொள்ளப்படும். அங்கீகரிக்கப்படாத சாதனங்களை பயன்படுத்துவது கூட ஆரம்பத்திலேயே தவிர்க்கப்படுகிறது.

2. தாண்டுகிற போட்டிகள் அல்லது எறியும் போட்டிகள் எதுவாக இருந்தாலும், எத்தனை வாய்ப்புக்கள் (Trials) கொடுக் கப் படவேணி டும் எண் பதைக் குறித்துக்கொள்ளலாம். அப்படி எடுக்கப்படும் முடிவானது, போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்டிருக்கவேண்டும்.

விளையாட்டுடை அணிதல்
(clothing)

3. எந்தப்போட்டி நிகழ்ச்சியாக இருந்தாலும், அப்போட்டியில் கலந்துகொள்கின்ற வீரர்கள்/வீராங்னைகள், அணிந்திருக்கும் உடையானது சுத்தமாகவும், மற்றவர்கள் அந்த ஆடையினைக் குறை கூறி மறுப்பு தெரிவிக்காத வண்ணம் பண்பார்ந்த முறையிலும் இருக்கவேண்டும். உள் உறுப்புக்களைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டும் வண்ணம் உள்ள ஆடைகளை அணியக் கூடாது.