பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



42

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


பதித்துக் கொள்ள அனுமதியுண்டு. அந்த எண்ணிக்கையிலும் ஒர் அளவு உண்டு.

காலணியின் முன்பாதப் பகுதியில் 6 ஆணிகளும், குதிகால் பகுதியில் 2 ஆணிகளும் இருக்கலாம்.

உயரத்தாண்டும் போட்டியாளர்கள், வேலெறியும் போட்டியாளர்கள் அணிந்திருக்கும் காலணிகளில், குதிகால் பகுதியில் 4 ஆணிகள் வரை வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டிருக்கிறது.

குறிப்பு : மேற் கூறப்பட்ட காலணியின் அடிப்பகுதியில் அது குதிகால் பகுதியாக இருந்தாலும் சரி, அல்லது முன் பாதப்பகுதியாக இருந்தாலும் சரி, ஆணிகளை அவரவர் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் (அடிப்பகுதியில்) வைத்துக்கொள்ளலாம். ஆனால், ஆணிகளின் எண்ணிக்கை குறிப்பிட்டிருப்பதற்கு மேல் இருக்கக்கூடாது.

பந்தயக் காலணியின் நீளம்

ஒரு பந்தயக் காலணியின், குதிகால் பகுதியிலிருந்து முன்புறம் நோக்கி 25 மில்லி மீட்டர் நீளத்திற்கு மேல் அல்லது 4 மில்லி மீட்டர் விட்ட அளவுக்கு மேல் நீண்டு போயிருக்கக் கூடாது.

சிந்தடிக் ஓடுகளப் பாதைகளில் (Synthetic Track) ஒட்டப் போட்டிகள் நடைபெறும் போது, அணிந்து கொள்கிற ஒரு காலணியானது, அதன் அடிப்பாகத்திலிருந்து (குதிகால்) முன்புறம் நோக்கி 9 மில்லி மீட்டர் நீளத்திற்கு மேல் நீண்டிருக்கக் கூடாது.