பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



48

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


பங்கு பெறும் போட்டியாளர்கள், போட்டி நடைபெறும் பொழுது மைதானத்தை விட்டு வெளியே சென்றுவர விரும்பினால், அனுமதி பெற்று ஒரு நடுவரின் துணை பெறுகிற உதவியுடன் வெளியே போய் வரலாம்.

போட்டியின்போது உதவி பெறுதல்

10. மாரதான் ஓட்டம், நீண்ட தூர ஓட்டங்கள், மற்றும் நடைப்போட்டிகள் இவற்றைத் தவிர, ஒரு போட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் ஒரு போட்டியாளர், ! வெளியாட்கள் யாரிடமிருந்தும் எந்த விதமான உதவியையும் பெறக் கூடாது.

உதவி என்பது அறிவுரை பெறுதல், போட்டி நுணுக்கம் பற்றிய குறிப்புகள் பெறுதல், மற்றும் எப்படி: ஓடுதல் என்பது பற்றிய குறிப்புரை பெறுதல் போன்றவை அடங்கும்.

யாராவது ஒரு போட்டியாளர் மற்றவர்களிடமிருந்து அறிவுரையோ (advice) அல்லது குறிப்புரையோ பெறும்போது, தலைமை நடுவர்.அவரை எச்சரிக்க வேண்டும். மீண்டும் அந்தத் தவறையே திரும்பச் செய்யும் போது, கடுமையாக எச்சரிக்கை (warn) தர வேண்டும். மீண்டும். அதையே செய்யும்போது, அவர் அந்தப் போட்டியில் தொடர்ந்து பங்கு பெறும் வாய்ப்பை நீக்கி, அவரை போட்டியிலிருந்தே விலக்கி விட வேண்டும்.

விலக்குவதற்கு முன், அவர் நிகழ்த்தியிருந்த, சாதனை மட்டும் அவர் பெயரில் குறிக்கப்படும்.