பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


தாமதப்படுத்துதல்

13. எறிகிற அல்லது தாண்டுகிற ஒரு களப்போட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுகிற ஒரு போட்டியாளர், தனது எண்ணை அழைத்து வாய் ப் பினை நிறைவேற்ற அழைத்தவுடன், வராமல் நேரம் கடத்தியவாறு, தாமதப்படுத்தினால், அவரது வாய்ப்பு முடிந்ததென்று அறிவிக்கப்பட்டு, அவர் அந்த வாய்ப்பில் வெற்றி பெறவில்லை என்பதாகவும் குறிப்புத்தாளில் குறித்து வைக்கப்படும்.

இது போன்ற சமயங்களில், தாமதப்படுத்துவதற்கான காரண சூழ் நிலைகளை ஆராய்ந்து, அதன் படி முடிவெடுத்திடவேண்டும். ஒரு குறிப்பிட்டப் போட்டி நிகழ்ச்சிக் குப் பொறுப்பாளராக இருக்கும் ஓர் அதிகாரி, போட்டி நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்திட, எல்லாவிதத்திலும் தயாராகிக் கொண்ட பின்னர்தான் போட்டியாளர்களுக்கு அறிவித்து, அவர்களுக்கு எப்பொழுது அவரது வாய்ப்புகள் வரும் என்பதையும் குறிப்பிட்டு தெரிவித்திட வேண்டும்.

ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சிக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வழங்கப்படுகிற அனுமதி நேரம், பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

1. உயரம் தாண்டல், நீளம் தாண்டல், மும்முறைத் தாண்டல், இரும்புக் குண்டு எறிதல், தட்டெறிதல்,