பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

51


சங்குலிக்குண்டு எறிதல், வேலெறிதல் போன்ற நிகழ்ச்சிகளில் பெயர் அழைத்ததும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள ஏற்படுத்திய அனுமதி நேரம் 112 நிமிடம்.

2. கோலூன்றித் தாண்டும் போட்டிக்கு மட்டும் 2 நிமிடம். அதாவது, குறக்குக் கம்பம் செங்குத்தான கம்பங்களில் சரியாகப் பொருத்தப்பட்டு அசையாமல் நிற்கிறது என்று போட்டியாளர் கருதுகிற நேரத்தில் இருந்து, அந்த 2 நிமிட எண்ணிக்கைத் தொடங்கிவிடுகிறது.

முதல் முறையாக வாய்ப்பினைப் பயன்படுத்த வராமல் இருந்தால், வாய்ப்பு நிராகரிக்கப்படும்.

இரண்டாவது தடவையாக வாய்ப்பினை நிறைவேற்றத் தாமதப்படுத்தினால், அந்தப் போட்டியிலிருந்தே பங்கு பெறும் வாய்ப்பை அந்தப் போட்டியாளர் இழந்து போகிறார். அதாவது நடுவரால் நீக்கப்படுகிறார். அவர் போட்டியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன், செய்திருந்த சாதனை, குறிப்பேட்டில் குறித்து வைக்கப்படுகிறது.

15. களப்போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு இடத்தை, வேறொரு இடத்திற்கு மாற்றிச் சென்று நடத்திட, தலைமை நடுவருக்கு முழு அதிகாரமுண்டு. அவ்வாறு அவர் முடிவெடுத்ததை, சுற்றுப்புற சூழ்நிலைகள் சரியென்று நிருபித்திட வேண்டும்.

அவ்வாறு இடம் மாற்றுவதற்கு முன், போட்டியாளர், அனைவரும் ஒரு சுற்று (Round) வாய்ப்பினை முடித்திருக்க வேண்டும். அதன் பிறகே மாற்றலாம்.