பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


என்னையே நான் பாராட்டிக் கொள்கிறேன். பெற்ற வெற்றிக்காக அல்ல.... சுட்டத் தோல்விகளில் பட்டுப்போகாமல், சுடர்ப்பொன்னாக பயன்தர விளைந்து, விழைந்து வெளியே வந்ததற்காக.

சுற்றுப்பயணங்கள் தாம் என் விற்பனை வேலையை சுமையாக்கின, சுவையாக்கின, சுகம் தரும் சோலையாக்கின.

அத்தகைய சுற்றுப்பயணங்களின் போது, பல ஒடுகளப் போட்டிகள் நடைபெற்ற ஊர்களுக்குச் சென்ற போது, போட்டி நிகழ்ச்சிகளில் போட்டி நடத்துபவர்களுக் கிடையே எழுந்த பூசல்கள் யாவும், விதிகள் பற்றிய காரணத்தால் தாம் என்பதை தெரிந்து கொண்டேன்.

அடிக்கடி மாறும் விதிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டியது உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் போட்டியாளர்கள், போட்டி அமைப்பாளர்கள் கடமை அல்லவா!

அடிக்கடி விதிமுறைகள் மாறிக்கொண்டு வருகின்றன. சிறிது காலம் கழித்து, மாறிய விதி முறைகள் நூலாக வெளி வருகின்றன. ஆனால் அந்நூல்கள் கிடைப்பது தான் அரிதாக இருக்கின்றது. ஆங்கில நூல்களைத்தான் சொல்லுகிறேன்.

இப்படிப்பட்ட ஆங்கில விதிமுறை நூலை வைத்திருக்கும் வாய்ப்புள்ள ஒரு சிலர், நூலை வெளியே காட்டுவதற்கு மறுத்து, பத்திரமாகப் பதுக்கி வைத்துக் கொள்கின்றனர். மற்றவர்களுக்கு இந்த விதிமாற்றங்கள் தெரிந்து போனால், தங்களுக்கு மரியாதை இருக்காது என்பதாகவும் நினைத்துக் கொள்கின்றனர் என்ன செய்வது!

இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முயல்கின்ற ஆசிரியட் பெருமக்கள், உண்மையான விளையாட்டு விரும்பிகள்.