பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



58

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


ஒவ்வொரு போட்டியாளருக்கும் 3 வாய்ப்புகள் எறிய அல்லது தாண்ட உண்டு. அந்த 3 வாய்ப்புக்கள் அந்த போட்டியாளர். குறித்துள்ள தகுதி நீளத்தை அல்லது தூரத்தை அடைந்துவிட்டால் அவர் மீண்டும் தகுதிப் போட்டிக்கான வாய்ப்பில் பங்கு பெறவேண்டிய அவசியமில்லை.

தகுதி அறியும் போட்டியில், தகுதிபெற்ற போட்டியாளர்கள், மீண்டும் முறையான போட்டியில் பங்குபெறும்போது, புதிய சீட்டுக் குலுக்கலின் மூலம் வரிசை படுத்தப்படுவாள்கள்.

குறிப்பு: உலகநாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிற போட்டிகளில் அதிகமான எண்ணிக்கையில் போட்டியாளர்கள் போட்டியில் கலந்துகொள்வார்கள். அப்போது, தகுதியை நிர்ணயித்துவிட்டு, அவர்களுக்கு நடத்துகின்ற தகுதி அறியும் போட்டிகளை ஒரே இடத்தில் நடத்தாமல், இரண்டு மூன்று குழுக்களாகப் பிரித்து, தகுதிப் போட்டியை நடத்தலாம்

அவ்வாறு நடத்த முடியாதவாறு வசதிகள் குறைவாக இருந் தாலி , முதலில் ஒரு குழுவினர் க் குத் தகுதிப்போட்டிகளை நடத்தி முடித்துவிட்டு, அது முடிந்த பின்னர், அடுத்தக் குழுவினருக்கான தகுதிப்போட்டிகளை நடத்தி, முடிவுகளை கண்டு அறியலாம். இரண்டு குழுக்களும் தாங்கள் வாய்ப்புகளைப் பெற்றிட, இதுபோன்று பிரித்துப் போட்டிகள் நடத்துவது செளகரியமாக இருக்கும்.