பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

39


5. போதை மருந்து
(Doping)
விதி - 144

1. போட்டியாளர்கள் போதை மருந்து உண்ணுதல், கட்டாயமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது.

2. போதை மருந்து என்பது, அதை உட்கொண்ட உடலாளருக்கு, உடல் திறமைக்கும், மன வலிமை ஏறக்கூடிய மனோநிலையை உண்டு பண்ணவும் கூடிய செயற்கையான உள் ஊட்டத்தை அளித்து, அவரது விளையாட்டுப் போட்டி சாதனைகளில் விருத்தி செய்யும் வல்லமை அளிப்பதாகும்.

3. போட்டி நடத்தும் கழகத்தினால் அமைக்கப்பட்ட மருத்துவக் குழுதான் போதைப்பொருள்கள் பற்றி முடிவெடுக்க வேண்டும்.

போதைப் பொருள் பற்றி தண்டனை அளிப்பதற்கு முன், அவர் என்ன போதைப் பொருள் உட்கொண்டிருந்தார் என்பதனை அந்தக் குழு குறிப்பிட்டு அறிவித்தாக வேண்டும்.

4. அகில உலக அமெச்சூர் அதெலடிக் கழகம், இவ்வாறு போதைப் பொருள் உண்டாரா என்பதை அறிந்து கட்டுப்படுத்தும் உரிமை பெற்றிருக்கிறது. போதைப் பொருள் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் எல்லாம் அகில உலக