பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

61


உடலாளர்களை மட்டும் அழைத்து சோதனையிடுவது என்பது கூடாதி ஒன்றாகும்.

இந்த சோதனை செய்யும் குழு, போட்டி நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட, கூடுதலான சோதனை ஒன்றை நடத்தவும் ஆணையிடலாம்.

5. போட்டியிட இருக்கிற ஒரு உடலாளர், போதை மருந்து சோதனை செய்கிற குழுவில் உள்ள அதிகாரி ஒருவரால் அழைக்கப்பட்டு, தான் போதை மருந்து எதுவும் உட்கொண்டிருக்கவில்லை என்று எழுத்து மூலம் எழுதித் தந்து, உறுதியளிக்கும்படி கோரப்பட்டால், அவர் அவ்விதமாகவே எழுதி உறுதியளிக்க வேண்டும்.

அவ்வாறு எழுதித்தந்து உறுதியளிக்க மறுக்கிற ஒரு போட்டியாளர், போட்டியிடுகிற வாய்ப்பினை இழக்கும் நிலையை அடைவதுடன், அவர் போட்டியிடவே தகுதியற்றவர் என்றும் அறிவிக்கப்படுகிறார்.

அவரைப் பற்றி அகில உலக அமெச்சூள் அதெலடிக் கழகத்திற்கும், அவர் சார்ந்துள்ள நாட்டின் தேசிய தலைமைக் கழகத்திற்கும் அறிவிக்கப்பட்டு, எடுத்த முடிவு பற்றி கூறப்படும். போதை மருந்து பற்றி சோதனை செய்கிற மருத்துவக் குழுவின் தலைவர் இவ்வாறு அனைவருக்கும் அறிவிப்பார்.